ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 1 பிப்ரவரி 2024 (11:11 IST)

மக்களவை தேர்தல் எதிரொலி..! 100 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்..!

dgp
தமிழ்நாடு முழுவதும் 100 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 
 
நாடாளுமன்ற மக்களவைக்கு வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளில் தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் தேர்தலுக்கான தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
 
மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக ஐ.ஜி.க்கள் முதல் காவலர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் 62 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 100 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 

 
3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் காவல்துறையினரை உடனடியாக மாற்ற வேண்டும் என டிஜிபி ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி இருந்த நிலையில், இந்த இடமாற்றம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.