1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 10 percent polling untill 9 am

உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு… 9 மணி வரை 10 சதவீத வாக்குப்பதிவு!

உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இப்போது நடந்து வருகிறது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்த நிலையில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் இன்று (9 ஆம் தேதி) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. ஆம், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். 

காலை 9 மணி நிலவரப்படி 9.72 சதவீத வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
அடுத்த கட்டுரையில்
ஆப்கானிஸ்தான் தாக்குதல்: ஐ.நா கண்டனம்