திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 16 ஏப்ரல் 2022 (12:01 IST)

சித்திரைத் திருவிழா நெரிசலில் சிக்கி பலி: தலா ரூ.10 லட்சம் நிதி!

மதுரை வைகையாற்றில் நெரிசலில் சிக்கி இறந்த 2பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு. 
 
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதால் அதை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 
 
பின்னர் அங்கு கூடிய பக்தர்கள் கோவிந்தா கோஷமிட்டும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய போது கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் இருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் 9498042434 என்ற எண்ணில் விவரம் அறியலாம் என தெரிவிக்கப்பட்டது. நெரிசலில் சிக்கி உறவினர்கள் காணாமல் போயிருந்தால் உதவி என்னை தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.   
 
இதனைத்தொடர்ந்து மதுரை வைகையாற்றில் நெரிசலில் சிக்கி இறந்த 2பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். காயமடைந்த 11 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டார் என மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார்.