இந்திய கம்யூனிஸ்ட் & மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 17 மே 2021 (14:05 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் முதல்வர் நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் நிதி வழங்கியுள்ளன. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மருத்துவ அவசர செலவினங்களுக்காக நிவாரண நிதி வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி பல தொழிலதிபர்களும், திரை பிரபலங்களும் முதல்வர் நிவாரண நிதியில் நிதியளித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வரின் நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. முத்தரசன் மற்றும் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்த நிதி உதவியை அளித்தனர். 


இதில் மேலும் படிக்கவும் :