திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 31 மே 2021 (18:40 IST)

சூர்யா, விஷால் பட இயக்குநர் ரூ.10 லட்சம் நிதியுதவி!

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்தக் கொரொனா தொற்றிற்கு சாதாரண மக்கள் முதல், அரசியல்தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் இதற்கான விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினி குடும்பம், சிவக்குமார், குடும்பம்,அஜித் குமார் உள்ளிட்ட பலரும் முதல்வர் அவர்களின் பொதுநிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கிய நிலையில், இன்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ  உதயநிதியை சந்தித்து முதல்வர் அவர்களின் பொதுநிவாரண நிதிக்கு சூர்யாவின் அஞ்சான், விஷாலின் சண்டக்கோழி பட இயக்குநர் லிங்குசாமி ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,  கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இயக்குனர்-தயாரிப்பாளர் நண்பர்@dirlingusamy அவர்கள் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை என்னிடம் இன்று வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும் எனத் தெரிவித்துள்ளார்.