1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 ஜூன் 2021 (09:45 IST)

10 நாட்களுக்கு தமிழகத்தில் மின்வெட்டு: ஏன் தெரியுமா?

மின்சாரத் துறையில் 10 நாட்களுக்கு  பராமரிப்பு பணி நடைபெறுவதால் தமிழகத்தில் மின்வெட்டு நிலவும் என்று மின்வாரியத் துறை அமைச்சர் அறிவிப்பு. 

 
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின் வாரிய அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 
 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 9 மாதங்களாக மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. வருகின்ற 19 ம் தேதி முதல் 10 நாட்களுக்கு பராமரிப்பு பணிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 
துணை மின் நிலையங்கள்,பழுதடைந்த மின் பெட்டிகள், மின் கம்பங்கள் என அனைத்து பராமரிப்பு பணிகளும் முன் அறிவிப்புடன் விரைந்து போர்க்கால அடிப்படையில் முடிக்கப்படும். மின் ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சொல்லப்படும். 
 
தமிழ்நாடு மின் வாரியம் 30-4-2021 தேதி வரை 1,33,671 கோடி கடனில் உள்ளது. முதல்வரின் ஆலோசனைப்படி கடன் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் செலுத்தாவிட்டாலும் இணைப்பு துண்டிக்கப்பட மாட்டாது.
 
நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்து தன்னிறைவு அடையும் போதுதான் நம் மின்மிகை மாநிலம் என கூறமுடியும். இப்பொழுதும்  நாம் வெளி மாநிலத்தில் இருந்து விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கும் நிலையில் தான் இருக்கிறோம். எனவே தமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல.