1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 10, 12th marksheet correction last date announcement

10,12 மதிப்பெண் சான்றிதழில் திருத்த நாளை கடைசி நாள்: முதன்மை கல்வி அலுவலர்..!

10ஆம் வகுப்பு
10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் மதிப்பெண்ணில் திருத்தம் செய்ய நாளை கடைசி தினம் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 
 
10,12  வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் பெயர், பிறந்த தேதி, புகைப்படம் ஆகியவற்றை திருத்தம் செய்ய விரும்பும் மாணவர்கள் நாளைக்குள் திருத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்ட பிறகு சான்றிதழ் திருத்தம் செய்ய முடியாது என்றும் திருத்தம் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த முதன்மை கல்வி அலுவலர் கடிதம் எழுதி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதனை அடுத்து 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுடைய சான்றிதழில் தவறு ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக நாளைக்குள் திருத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டது.. பயணிகளுக்கு பாதிப்பா?