வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 20 ஜூலை 2018 (10:54 IST)

600 சிறுவர்கள் நரபலியா? மத போதகரின் கொடூர செயல்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானா நாட்டில் மத போதகர் ஒருவர் சுமார் 600 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்த நடந்த விசாரணையில் அந்நாட்டில் உள்ள மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் மூலம் சிறுவர்களை பெற்று வந்த மதபோதகர் ஒருவர் கடந்த 17 ஆண்டுகளில் 600 சிறுவர்களை நரபலி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது
 
தான் சாத்தானுடன் வாழ்ந்து வருவதாகவும், சாத்தானின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்த நரபலியை தான் செய்ததாகவும், அந்த மதபோதகர் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். தனக்கு சாத்தானின் சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நரபலியை செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
இத்தனை வருடங்கள் நரபலி செய்து வரும் மதபோதகரை அந்நாட்டின் காவல்துறை இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.