வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் ஹெலிகாப்டரில் மீட்பு : வீடியோ


Murugan| Last Modified திங்கள், 7 டிசம்பர் 2015 (11:49 IST)
சென்னையில், மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஒரு கர்ப்பிணிப் பெண்ணை ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் மீட்கும் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

 
 
சென்னையில் டிச.2 ஆம் தேதி பெய்த கனமழையில் பல பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. வீடுகளை சுற்றியும், வீட்டிற்குள்ளேயும் வெள்ள நீர் புகுந்தது. அதனால் அந்த வீடுகளிலிருந்து பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
 
இதில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில், ஒரு கர்ப்பிணிப்பெண் சிக்கிக் கொண்டார். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த பொதுமக்கள், ராணுவத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பின் ராணுவ வீரர்கள், ஒரு ஹெலிகாப்டரில் வந்து அவரை மீட்டனர். 
 
அதைப் பார்த்த பொதுமக்கள் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 
 
 அந்த வீடியோ இப்போது வெளியாகியிருக்கிறது. 
 
அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்...   
 


இதில் மேலும் படிக்கவும் :