1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 4 ஜூலை 2022 (16:48 IST)

சூப்பரான சுவையில் முட்டை குழம்பு செய்ய !!

egg gravy
தேவையான பொருட்கள்:

முட்டை - 10
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
தக்காளி - 2 (விழுதாக அரைத்தது)
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் (தனியாத்தூள்) - 1 மேஜைக்கரண்டி
கரம்மசாலா தூள் - 1 மேஜைக்கரண்டி
நீர் - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு



செய்முறை:

தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். முட்டையை வேகவைத்து கொள்ளவும். அவற்றை குளிர்ந்த நீரில் கழுவி அதன் ஓடுகளை உடைத்து தனியே வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும். அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் மசாலா தூள்களை சேர்த்து நன்கு கிளறவும்

மசாலா வாசனை போனவுடன் தக்காளி விழுது சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும். அடுத்து அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதிக்க ஆரம்பித்தவுடன் காடை முட்டைகளை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.  முட்டை குழம்பு தயார்.