1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala
Last Modified: புதன், 8 ஜூன் 2022 (15:17 IST)

சூப்பரான சுவையில் சிக்கன் உருளைக்கிழங்கு கட்லெட் செய்ய !!

Chicken Cutlet
தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
வெங்காயத் தாள் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் (தனியா) - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
சிக்கன் - 300 கிராம்
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்தது)
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - 3 மேஜைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 3 மேஜைக்கரண்டி
மைதா மாவு - 3 மேஜைக்கரண்டி
பிரட் தூள் - 2 மேஜைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு



செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத் தாள் சேர்த்து வதக்கி பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் கிளறவும். பின்னர் பச்சை மிளகாய், அனைத்து மசாலாக்களையும் சேர்க்கவும். பின்பு கரம் மசாலா தூள், உப்பு சேர்க்கவும்.

பிறகு சிக்கன் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, வேகவைக்கவும். அவை பொன்னிறமாகும் வரை வைத்து பின் அதனுடன் கொத்தமல்லித் தழை சேர்க்கவும். பின்பு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

வேகவைத்த உருளைக் கிழங்கை எடுத்து, அதனை நன்கு மசித்துக் கொள்ளவும். பின் அதனுடன் வதக்கிய மசாலாவை சேர்த்து, அவற்றை கையால் நன்கு பிசைந்து அதனுடன் பிரட் தூள்களை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவேண்டும்.

பின்பு அதிலிருந்து சிறிய பகுதி எடுத்து அதனை பந்து போன்று உருட்டிக் கொள்ளவும். அதனை தட்டையாக்கவும்.

பின்பு மைதா மாவுடன் சிறிது நீா் சேர்த்து நன்கு கலக்கவும். பிரட் தூளை எடுத்துக் கொள்ளவும். பின்பு செய்து வைத்திருக்கும் கட்லெட்டை மைதா மாவில் முக்கி எடுக்கவும். பின்பு அதனை பிரட் தூளில் பிரட்டி எடுக்கவும்

அனைத்து கட்லெட்டுகளையும் மாவில் முக்கி எடுத்து அவற்றை 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும். பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கட்லெட்டை எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும். அவ்வளவுதான் சூப்பரான சுவையில் சிக்கன் உருளைக்கிழங்கு கட்லெட் தயார்.