புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By

சுவையான சிக்கன் பரோட்டா செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
எலும்பு இல்லத சிக்கன் - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
சீரகம், மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக)
கொத்தமல்லி - 1 கைப்பிடி
வெங்காயம் - 2
மிளகு தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மைதா - ஒரு கப்
செய்முறை:
 
முதலில் ஒரு பவுலில் ஒரு கப் மைதாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவேண்டும். பின்னர்  ஒரு துணியால் மூடி அரை மணிநேரம் ஊறவிடவேண்டும்.
 
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, அரை வேக்காடு வேகவைத்து கொள்ளவும். அதாவது ஒரு வானலியில் சிக்கனை போட்டு அவற்றில் சிறிதளவு எண்ணெய் மற்றும் அரை ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். சிக்கன் வெந்ததும் மிக்ஸியில் சேர்த்து  அரைத்து வைத்து கொள்ளவும்.
பின்பு அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு பொடிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு, வெங்காயம் நன்கு வதக்கி, மசாலாப்பொருட்களான மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் சீரக தூள், ஒரு டீஸ்பூன் தனியா தூள், ஒரு டீஸ்பூன் இஞ்சி  பூண்டு விழுது, டீஸ்பூன் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பின்பு அரைத்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து  வதக்கவும்.
 
பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி கட்டையில் மைதா மாவை தேய்த்து அதனுள் சிக்கன் கீமாவை வைத்து மடிக்கவேண்டும். பின்னர் திரும்பவும் சப்பாத்தி பலகையில் வைத்து சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும். இதனை தோசை  கல்லில் போட்டு சிறிதளவு எண்ணெய் விட்டு, இரண்டு பக்கமும் பிரட்டி எடுத்தால் சுவையான சிக்கன் பரோட்டா தயார்.