1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

சூப்பரான சுவையில் சிக்கன் கிரேவி செய்ய..!!

தேவையான பொருட்கள்:
 
சிக்கன் - 1/2 கிலோ 
சின்ன வெங்காயம் - 100 கிராம் 
எண்ணெய் - 100 கிராம் 
மிளகாய் வற்றல் - 3
மஞ்சள் பொடி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
முந்திரிபருப்பு -10 கிராம் 
சீரகம் - 1/4 தேக்கரண்டி 
சோம்பு - 1/4 தேக்கரண்டி 
மிளகு - 1/4 தேக்கரண்டி 
பட்டை - 1
கிராம்பு - 1
மிளகாய் பொடி -10 கிராம் 
தேங்காய் எண்ணெய் - சிறிதளவு
தேங்காய் சில் - 1
இஞ்சி பூண்டு விழுது - 10 கிராம் 
செய்முறை:
 
ஒரு வாணலியில் சீரகம், சோம்பு, மிளகை தனித்தனியாக வறுத்து பட்டை, கிராம்பு சேர்த்து பொடியாக்க வேண்டும். முந்திரி பருப்பை தனியாக அரைக்க வேண்டும். சிக்கனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் விட்டு அரைவேக்காட்டில் வேக வைத்து  எடுக்க வேண்டும்.
 
வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து சின்னவெங்காயத்தை வதக்க வேண்டும். மேலும் இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் பொடி, மசாலாப் பொடி வகைகள் சேர்த்து வதக்க வேண்டும். கலவை கொஞ்சம் கெட்டியாக வரும் போது, சிறிதளவு  உப்பு, இறைச்சியை சேர்த்து வதக்க வேண்டும்.
 
அடுப்பிலிருந்து இறக்கும் முன், முந்திரி விழுதை சேர்க்க வேண்டும்.தேங்காய் துண்டுகளை தேங்காய் எண்ணெயில் வதக்கி மேலே தூவி,  மல்லிதழையால் அலங்கரிக்க வேண்டும்.