வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala
Last Modified: சனி, 19 மார்ச் 2022 (17:54 IST)

சுவையான வஞ்சிர மீன் வறுவல் செய்ய !!

தேவையான  பொருட்கள்:

வஞ்சிர மீன் - 4 துண்டு
எலுமிச்சம் பழச்சாறு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த் தூள் - 25 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தனியாத் தூள் - 10 கிராம்
மிளகுத் தூள் - 5 கிராம்
சீரகத் தூள் - 5 கிராம்
அரிசி மாவு - 10 கிராம்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், சீரக தூள், உப்பு, எலுமிச்சைபழ சாறு சேர்த்து மீனை நன்றாக 1 மணி நேரம் வைக்கவும்.

கடாயில் எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளை போட்டுப் பொரித்து எடுக்கவும். எண்ணில் பொரித்தெடுத்த கறிவேப்பிலையை, மீன் துண்டுகளின் மீது தூவி விடவும். சுவையான வஞ்சிர மீன் வறுவல் தயார்.