வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala
Last Modified: புதன், 16 பிப்ரவரி 2022 (16:44 IST)

சுவை மிகுந்த நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் - 1/2 கிலோ
எலுமிச்சம்பழம் (சாறு) - 2 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 கைப்பிடி
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மைதா மாவு - 1 கைப்பிடி
சோளமாவு - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 2 கொத்து



செய்முறை:

முதலில் நெத்திலி மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா மாவு, சோள மாவு, மிளகாய் தூள், தனியா தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்னர் எலுமிச்சை பழ சாறு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். நெத்திலியுடன் இந்த மாவு, மசாலாவை கலந்து சிறிது நீர் சேர்த்துப் கிளறவும்.

எண்ணெய் காய்ந்ததும் நெத்திலி மீனை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொறித்து எடுத்தால் சுவையான நெத்திலி மீன் வறுவல் தயார்.