1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala
Last Updated : சனி, 26 பிப்ரவரி 2022 (16:48 IST)

சேமியா சிக்கன் பிரியாணி செய்ய !!

தேவையான பொருட்கள்:

சேமியா - அரை கிலோ
கோழிக்கறி - 300 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பட்டை - சிறிதளவு
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி புதினா - சிறிதளவு
மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 25 கிராம்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப



செய்முறை:

நான்கு கப் தண்ணீர் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி மஞ்சள் தூள் போட்டு கொதிக்கவிட வேண்டும். பிறகு அதில் சேமியா போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பிறகு அதனுடன் கோழிக்கறியை நன்றாக கழுவி அதில் மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறவும்.

கோழிக்கறி நன்றாக வெந்த பிறகு வடித்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து கிளற வேண்டும். பிறகு முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து அதோடு சேர்க்கவும். பிறகு மல்லித் தழையை தூவி பரிமாறவும். சுவையான சேமியா சிக்கன் பிரியாணி தயார்.