சுவையான சில்லி இறால் செய்ய...!!

Chili Prawn
Sasikala|
தேவையான பொருட்கள்:
 
இறால் - 500 கிராம்
மிளகு - 2 தேக்கரண்டி
குடை மிளகாய் - 1
மைதா மாவு - 4 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
சோளமாவு - 4 மேஜைக்கரண்டி
வெங்காயத்தாள் - 2
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 மேஜைக்கரண்டி
பூண்டு - 4 பல்
இஞ்சி - 2 அங்குலம்
பச்சை மிளகாய் - 2
சர்க்கரை - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 500 மி. லி.
செய்முறை:
 
இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், இவற்றை பொடியாக நறுக்கிக்  கொள்ளவும். 
 
குட மிளாகாயை முக்கோண வடிவில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தாளை  நறுக்கிக் கொள்ளவும். முட்டையை உப்புத்தூள் சேர்த்து அடித்துக் கொள்ளவும். முட்டையுடன், சோளமாவு, மைதாமாவு, மிளகுத்தூள் இவற்றை  கலந்து வைத்துக் கொள்ளவும்.
 
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இறாலை முட்டைக் கலவையில் நனைத்து எடுத்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து தனியே வைக்கவும். எல்லா இறாலையும் இதேபோல பொரித்து வைத்துக் கொள்ளவும்.
 
வேறு வாணலியில் 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், மிளகு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், குடை  மிளகாய், சோயா சாஸ் இவற்றைப் போட்டு வதக்கவும்.
 
வதக்கியபின் பொரித்து வைத்துள்ள இறால் வெங்காயத்தாள், சர்க்கரை இவற்றைப் போட்டு கிளறி நன்றாக வதக்கி இறக்கி பரிமாறவும்.  சுவையான சில்லி இறால் தயார்.


இதில் மேலும் படிக்கவும் :