1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 16 மே 2018 (19:28 IST)

பிறை தெரிந்தது, நாளை முதல் ரமலான் நோன்பு: தலைமை காஜி அறிவிப்பு

இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு இன்று பிறை தெரிந்தால் இன்று முதல் ஆரம்பமாகும் என்று ஏற்கனவே தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அவர்கள் கூறியிருந்த நிலையில் சற்று முன் பிறை தெரிந்ததாகவும், எனவே நாளை முதல் ரமலான் நோன்பு அனுசரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
 
இதுகுறித்து  அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அளித்த பேட்டி கூறியதாவது; இன்று பிறை தெரிந்ததால் முஸ்லிம்கள் நாளை முதல்  ரம்ஜான் நோன்பு மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.