வியாழன், 21 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By papiksha joseph
Last Modified: சனி, 19 நவம்பர் 2022 (09:26 IST)

வீடே மணக்கும் நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி?

நெத்திலி மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
 
நெத்திலி மீன் - அரை கிலோ 
சிறிய வெங்காயம் - 150 கிராம் 
தக்காளி - 4
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
தனியா தூள் - ஒன்றரை ஸ்பூன் 
பச்சை மிளகாய்- 1
இஞ்சி- 1 சிறிய துண்டு 
பூண்டு - 7 பல் 
தேங்காய் பால் - 1 டம்ளர் 
வெந்தயம்- 1 ஸ்பூன் 
கொத்தமல்லி - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு- 1 ஸ்பூன் 
சோம்பு - 1ஸ்பூன் 
புலி- எலுமிச்சை அளவு
 
செய்முறை.
 
மீனை நன்றாக சுத்தம் செய்து லேசாக உப்பு மஞ்சள் தூள் போட்டு கிளறி 15 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் வெங்காயத்தை இரண்டாக நறுக்கவும். தக்காளியை நான்காக நறுக்கவும். இஞ்சியை விழுதாக அரைக்கவும். 
 
இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி வெந்தயம், சோம்பு, தாளித்து நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
 
இதில் மஞ்சள், மிளகாய், தனியா தூள்களை சேர்த்து என்னை பிரியும் வரை கொதிக்க விடவும். அடுத்து தேங்காய் பாலை சேர்த்து கொஞ்ச நேரம்  கொதிக்க விட்டு மீனை சேர்க்கவும். 
 
மீன் 2 அல்லது 3 கொதியில் வெந்துவிடும், குழம்பை இறக்கும் முன் ஒரு சிறிய வெங்காயத்தை தோலுடன் அதில் தட்டிப்போட்டு இறக்கவும். பின்னர் மல்லித்தழையை கொதிக்கும் குழம்பில் போட்டு பரிமாறலாம்.