1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Andhra, Amaravathi, Inngural, Chandrasekara Rav

அமராவதிக்கு அடிக்கல் நாட்டு விழா: சந்திரசேகராவுக்கு அழைப்பு விடுத்தார் சந்திரபாபு நாயுடு

ஆந்திரா
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் அமராவதிக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துகொள்ளுமாறு தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு  அழைப்பு விடுத்துள்ளார்.


 
 
ஆந்திரப் பிரதேச மாநிலம் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தெலுங்கானா மற்றும் ஆந்திரா என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. தெலுங்கானாவுக்கு ஐதராபாத் தலைநகராக அறிவிக்கப்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து ஆந்திராவுக்கான புதிய தலைநகரை அமைக்கும் முன்னேற்பாடுகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. இதற்காக 33 ஆயிரம் ஏக்கர் விவசாய விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே புதிய தலைநகரான அமராவதிக்கு அடிக்கல் நாட்டும் விழா வரும் 22 ஆம் தேதி நடைபெறுகிறது.
 
இதனை முன்னிட்டு ஐதராபாத்தில் சந்திரசேகர ராவை சந்தித்த சந்திரபாபு நாயுடு வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள விழாவிற்கு அழைப்பு விடுத்தார். தெலங்கானா பகுதி அரசியல் தலைவர்கள், தெலங்கானா சட்டப்பேரவை சபாநாயகர், தெலங்கானா மாநில பாரதிய ஜனதா தலைவர் ஜி கிஷன் ரெட்டி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வரும் 22ம் தேதி ஆந்திரபிரதேச புதிய தலைநகர் அமராவதிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.