திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முகத்தில் ஈரப்பசையை தக்கவைக்க எந்த குறிப்புகள் பயன் தரும்...?

நமது முகத்தில் செல்கள் தோன்றுவதும் அழிவதும் ஆக இருக்கும். சுழற்சி முறையில் இருக்கும் போது சருமத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது குறைவாகவே இருக்கும்.

பசும்பால், பாசிப் பயறு மாவு, குப்பைமேனி இலைச்சாறு, கஸ்தூரிமஞ்சள் கலந்து முகத்தில் தடவுவதால் முகச்சுருக்கம் சரியாகும். முகம் பொலிவு பெறுவதோடு முகம் எப்போதும் ஈரப்பசையோடு காணப்படும்.
 
வாழை தக்காளி பப்பாளி ஆப்பிள் போன்ற பழங்கள் ஏதேனும் ஒன்றுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து முகத்தை அழுத்திமசாஜ் செய்யவும். இறந்தசெல்கள் அவ்வப்போது வெளியேறுவதால் முகத்தில் ஜொலிப்பு கூடும்.
 
வறண்ட சருமம் சரியாக, தேன், பாலுடன் குங்குமப்பூ சிறிது கலந்து முகம் உடலில் தடவி குளிப்பதால் முகம் பளபளக்கும். எண்ணெய் வழியும் சருமத்திற்கு பாலில் குங்குமப்பூ கலந்து தடவி குளிப்பதால் சரியாகும்.
 
பாதாம் பருப்பு விழுதை வாரம் ஒருமுறை முகத்தில் அப்ளை செய்து வந்தால், சொர சொரப்பான சருமம் மிருதுவாகும். இந்த பேக் முகத்தில் உள்ள ஈரப்பசையை தக்கவைக்கும்.