எந்த உணவுகளை தவிர்ப்பதால் நோய்களை தவிர்க்கலாம்.....?
இயற்கை உணவு உண்ணும்போது சாப்பிடும் அளவு தானாகவே குறைந்துவிடுகிறது. தேவைக்கு மேல் சாப்பிடும் எண்ணமோ, பழக்கமோ ஏற்படாது. மேலும் நல்ல உடல் நலத்தையும் பெறமுடிகிறது.
இயற்கை உணவு உண்பதால் நீரழிவு, புற்றுநோய், சிறுநீரகக்கோளாறு, ஆஸ்துமா, தொழுநோய், யானைக்கால் போன்ற தீராத நோய்கள் குணமடைகிறது.
பல இடங்களில் உணவு முறையானது மாறியுள்ளது. பழங்கள், தேங்காய் மட்டுமே உணவாக எடுத்துக்கொள்வதால் இயற்கை வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள். எனவே ஒருவேளையாவது தேங்காய், பழங்களையே உண்டு, நீரைப் பருகி, இனிய காற்றை சுவாசித்து, எளியவாழ்வு வாழ விரும்புவோம்.
பசித்த பின்பு தான் எந்த உணவையும் சாப்பிட வேண்டும். அதைப்போல பசியெடுத்து சாப்பிடாமல் இருப்பதும் நமது உடலுக்கு கெடுதலே. பசியெடுத்து சாப்பிடும்போது உமிழ்நீர் நன்கு சுரக்கும். உண்ணும் உணவு செரித்துவிடும். அதோடு பசியே எடுத்தாலும் இரவில் மாமிச உணவுகள், இனிப்பு, எண்ணெய் பதார்த்தங்கள், பால், தயிர், புளிப்பு சுவையுடைய உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
மனிதனுக்கு உரிய உணவாகிய தேங்காய் பழங்களையே உணவாகப் பெரும்பாலும் உண்டு வாழ முயலும் போது, உடலிலுள்ள கழிவுகள் வெளியேறி, உடலும் ரத்தமும் சுத்தமாகி, உடல் தூய்மையானதாக உருவாகிறது. இதனால் வாத, பித்த, கப நாடிகள் சீரடைகின்றன. சுவாசமும் சீராகிறது.