திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (11:07 IST)

உயர் இரத்த அழுத்தத்தை கண்டறியாமல் விடுவதால் என்ன பிரச்சனைகளை ஏற்படுத்தும்...?

High Blood Pressure
இரத்தத்தில் அதிகளவு திரவம் இருந்தால், இரத்தக் குழாய்கள் சுருங்கியோ விறைப்பாகவோ இருந்தால் அல்லது அதில் அடைப்பு இருந்தால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.


உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகங்களிலுள்ள இரத்தக் குழாய்களை சேதப்படுத்தி, அவற்றின் செயல்பாட்டுத் திறனைக் குறைக்கிறது.

இரத்த அழுத்தம் என்பது இரத்த நாளங்களின் சுவர்களில் இரத்தம் பாயும் வேகம் மற்றும் இதயம் இரத்தத்தை பீச்சும்போது இதய வால்வுகள் அடைப்பான்களின் தாங்கக்கூடிய வலிமை ஆகும். நீண்ட கால உயர் இரத்த அழுத்தம் இதய சம்பந்தமான கோளாறுகளை ஏற்படுத்தும்.

கடுமையான உயர் இரத்த அழுத்த பிரச்சனை உடலின் வேறு சில அடிப்படை அல்லது தொடர்புடைய உடல்நல பிரச்சனைகளின் விளைவாக இருக்கலாம். இருப்பினும், சில நேரங்களில், உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் தெரியாமலேயும் இருக்கும்.

உடற்பயிற்சி, முக்கியமாக உணவில் உப்பின் அளவை குறைவாக சேர்த்துக்கொள்ளல், மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் மருந்துகளை எடுத்துக்கொள்ளல் போன்ற முறைகளை பின்பற்றுவதால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை கண்டறிதல் மற்றும் சிகிச்சையைத் தொடங்குதல் ஆகியவற்றில் தாமதம் ஏற்பட்டால், கடுமையான தொடர் சிக்கல்கள் ஏற்படுத்தும் மாரடைப்பு மற்றும் கண் பிரச்சினைகள் போன்ற தீவிர சிக்கல்கள் ஏற்படலாம்.

உயர் இரத்த அழுத்த கட்டுப்பாடு பெரும்பாலும் அடிப்படையில் தொடர்புள்ள நோயின் காரணத்தையும், சிகிச்சையையும் சார்ந்திருக்கிறது.