1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (12:34 IST)

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த எந்த உணவுகளை எடுக்கவேண்டும்...?

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த, தினசரி உடல் பயிற்சியில் ஈடுபடுவது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உகந்த உடற்பயிற்சிகள் போன்ற உடல் செயல்பாடுகள் இதயத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மாதுளை பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பயோஆக்டிவ் பாலிபினால்கள் உள்ளன. இதனால் உயர் இரத்த அழுத்தத்திற்கு நன்மை பயக்கும் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன.

நாவல் பழத்தில் பொட்டாசியம் உள்ளதால் இது மிகவும் தசைகளுக்கு நல்லது. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். மேலும் இது அதிக கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதிலும் மிகச் சிறந்தது.

பூண்டு அல்லிசின் என்ற இயற்கை கலவையை உற்பத்தி செய்வதால் பூண்டு பல ஆண்டுகளாக மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை உடனடியாகக் குறைக்கும் என்பதால், அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

வெந்தயம் மற்றும் வெந்தய கீரை இரண்டிலும் நார்ச்சத்து, கால்சியம் நிறைந்துள்ளன. இதன் விளைவாக இரத்த அழுத்தம் குறைகிறது. எனவே உணவில் வெந்தயம் அல்லது வெந்தய கீரையை சேர்த்துக்கொள்வது அவசியமாகும்.

தினசரி மிதமான உடற்பயிற்சியினாலும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். அதோடு நல்ல தூக்கமும் அவசியம். மேலும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.