தொடர்புடைய செய்திகள்
- முடி உதிர்வை கட்டுப்படுத்தி நன்றாக வளர உதவும் கொய்யா இலை...!
- எளிதில் கிடைக்கக்கூடிய அற்புத மருத்துவ குணம் கொண்ட வேப்பிலை...!!
- பலவித நோய்களுக்கு தீர்வு தரும் கடுக்காயின் மருத்துவ பலன்கள்....!
- தொப்பையை குறைக்க உதவும் உணவுகளும் அதன் பயன்களும்...!
- தினம் ஒரு கொய்யாப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...!
என்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா...?
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் பொருட்களில் ஓன்று பச்சை மிளகாய். சிலர், ஐயோ பச்சைமிளகாய் காரமாய் இருக்கே என்று ஒதுக்குவது உண்டு. அவ்வாறு பச்சை மிளகாயை ஒதுக்குவதை தவிர்த்து உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள் பற்றி பார்ப்போம்.
செரிமானம்: பொதுவாக பச்சை மிளகாயை நன்கு மென்று சாப்பிட்டால் வாயில் உமிழ் நீர் அதிகம் சுரக்கும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும். இந்த பச்சை மிளகாய் விட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. நோய்கள் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
இதயத்துக்கு நல்லது: பச்சை மிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் சீரான இதய துடிப்பிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது.
இரும்பு சத்து: பச்சை மிளகாயில் இருக்கும் விட்டமின் சி இரும்பு சத்தை கிரகித்துக்கொள்ள உதவுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க பச்சை மிளகாய் உதவுகிறது.
சர்க்கரை: இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பவர்கள் பச்சை மிளகாய் அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
தலைமுடி: பச்சை மிளகாயில் சிலிகான் சத்து அதிகம் இருப்பதால் தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வதை குறைக்க உதவுகிறது பச்சை மிளகாய்.
வைட்டமின் ஈ: பச்சை மிளகாயில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது சில சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரிந்திடும். அதனால் காரமான உணவை சாப்பிட்டால் நல்ல சருமத்தை பெறலாம்.
பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் சரும தொற்றுகள் ஏற்படாமல் காக்கிறது.
அடுத்த கட்டுரையில்
