புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By

முடி உதிர்வை கட்டுப்படுத்தி நன்றாக வளர உதவும் கொய்யா இலை...!

ஆண் பெண் இருபாலருக்குமே முடி உதிர்தல் என்பது பெரிய மனசங்கடத்தை உருவாக்கிவிடுகிறது. இந்த முடி உதிர்தலை கட்டுப்படுத்த பலர் பலவிதமான முறைகளை கடைபிடிக்கின்றனர். இதில் மிக எளிமையான ஒரு முறையை பற்றி பார்ப்போம்.
ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர்  தண்ணீர் ஊற்றி அதனை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இந்த கொதிக்கும் தண்ணீரில்  தேவைாயன அளவு கொய்யா இலைகளை போட வேண்டும். இந்த தண்ணீரை 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து பின்னர் இந்த நீரை வடிகட்டி  எடுத்துக்கொள்ள வேண்டும்.
தலைமுடியை ஷாம்பு கொண்டு நன்றாக அலசிக்கொள்ள வேண்டும். கண்டிஸ்னர் போட வேண்டாம். தலைமுடி காய்ந்ததும், இந்த கொய்யா இலை தண்ணீரை தலைமுடியில் அப்ளை செய்ய வேண்டும். தலையை நன்றாக 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். 
 
முடியின் வேர்க்கால்களுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும். இதனை இரண்டு மணிநேரம் அப்படியே தலையில் விட்டுவிட வேண்டும்.  பின்னர் மிதமான சூடுள்ள நீரில் முடியை அலச வேண்டும்.
 
உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருந்தால், இதனை வாரத்தில் மூன்று முறை செய்ய வேண்டும். முடி நன்றாக வளர  வேண்டும் என்றால், வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தலாம்.
 
கொய்யா இலையில் உள்ள விட்டமின் சி முடியை வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர வைக்க கூடியது. இதில் விட்டமின் சி, மற்றும்  விட்டமின் பி மிக அதிகளவில் உள்ளது.
 
கொய்யா இலைகளில் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. இது முடியின் வேர்க்கால்களின் ஆரோக்கியத்திற்கும், பொடுகுத்தொல்லையை போக்குவதற்கும் திறந்த தீர்வாக உள்ளது.
 
இந்த கொய்ய இலை சாறை தலையில் தடவி மசாஜ் செய்வதால், இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது முடியின் வேர்க்கால்களுக்கு  சத்துக்களை கொண்டு சேர்க்கும் தன்மை கொண்டது. முடியை ஆரோக்கியமாகவும் வளர செய்யக்கூடியது.