திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

தினம் ஒரு கொய்யாப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...!

கொய்யாப் பழத்தில் மிக அதிமான மருத்துவப் பயன்கள் உள்ளன. விலை மலிவாகவும் மிக எளிதாகவும் கிடைப்பதால் கொய்யாப் பழத்தைப் பற்றிய நன்மைகளை அறியவதில்லை.
கொய்யாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் கொய்யாப் பழம்  மிகவும் உதவி செய்கிறது.
 
கொய்யாவில் தான் அதிக வைட்டமின் சி உள்ளது. நார்ச்சத்து அதிகம் கொண்ட கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ போன்ற சத்துக்களுடன் போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும் உள்ளன.
நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலுக்கு எளிய தீர்வை தருகிறது. ஒரே நாளில் மலச்சிக்கலைத் தீர்க்கும் வல்லமை கொண்டது கொய்யா. தொப்பையை குறைக்கும். அமிலத்தன்மை, நெஞ்சு எரிச்சல், புளியேப்பத்திற்கு தீர்வளிக்கும்.
 
வைட்டமின்களும், தாதுச்சத்துக்களும் நிறைந்துள்ளதால் சருமம் பொலிவு பெரும். மினுமினுப்புக் கூடி, தோல் சுருக்கம் குறையும். கண் கோளாறுகள் விலகும். இது உடம்பிற்கு குளிர்ச்சியைக் கொடுக்ககூடியது.
 
பொட்டசியச் சத்து ரத்த அழுத்தத்தை சீராக்கும். மெக்னீசியம் நரம்புத்தளர்ச்சியை போக்கும். இதிலுள்ள வைட்டமின் சி சளித்தொல்லையைப் போக்கும். இருமலுக்கு விடை கொடுக்கும். 
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். வாயுத்தொல்லைக்கு தீர்வளிப்பதுடன் வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றிலிருந்தும் நிவாரணம் அளிக்கும். கொழுப்புச் சத்து குறைவான பழம் என்பதால் பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. 
 
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது. அருமையான கனிச்சாறு கொண்டுள்ளதால் குடல் புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது. கொய்யாப் பழம் மட்டுமல்லாமல், கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை போன்றவற்றிலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.