புதன், 18 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 9 ஜூலை 2022 (11:55 IST)

அம்மான் பச்சரிசி மூலிகையின் அற்புத மருத்துவ பயன்கள் !!

Amman Pacharisi
வெங்காயம் பூண்டு இவற்றோடு அம்மான் பச்சரிசி இலைகளை சேர்த்து சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து குணமடையலாம்.

அல்சர் நோயால் அவதிப்படுபவர்கள் பாசிப்பருப்புடன் அம்மான் பச்சரிசி கீரையை சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிட்டு வந்தால் அல்சரில் இருந்து முழுமையான குணம் அடையலாம்.
 
தாய்மை அடையாத பெண்களுக்கு அம்மான் பச்சரிசி இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் கர்ப்பப்பையும் பலப்பட்டு விரைவில் தாய்மை அடைவார்கள். ஆரோக்கியம் மேம்படும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவல்லது. ஆண்மை குறைவை குணமாக்கிடவும், விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரித்து ஆண்மலட்டுதன்மையை குணமாக்கும்  மருந்தாக பயன்படுகின்றது. 
 
சிவப்பு நிற அம்மான் பச்சரிசி பொடியை தினமும் எடுத்து வந்தால் விந்தணுக்களை அதிகரிக்கும். அம்மான் பச்சரிசி இலைகளுடன் கீழாநெல்லி இலைகளை சம அளவு எடுத்து  பசும்பாலில் அரைத்து தொடர்ந்து மூன்றுவாரங்கள் எடுத்துக் கொண்டால் தூக்கத்தில் விந்து வெளியேறும் பிரச்சனை குணமடையும்.
 
காலில் ஏற்படும் ஆணி, பாத எரிச்சல் பாத வெடிப்பு போன்றவற்றிற்க்கு அம்மான் பச்சரிசி தண்டுகளை உடைத்தால் கிடைக்கும் பாலினை, பாதத்தில் தடவி வந்தால் குணம் அடையலாம்.