1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 9 ஜூலை 2022 (10:34 IST)

அவகேடோ பழத்தில் கணிசமாக உள்ள சத்துக்கள் என்ன...?

Avocado
அவகேடோ பழம் தோல் வறட்சியை தடுப்பதோடு, ஆரோக்கியமான தோல் செல்கள் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.


அவகேடோ பழத்தின் சாறு அல்லது மில்க் ஷேக் தினமும் மூன்று அல்லது நான்கு முறை எடுத்துக் கொண்டால், வறண்ட சருமத்தில் வியத்தகு மாற்றம் ஏற்படுகிறது.
 
இந்த பழத்தில் பீட்டா சிடோஸ்டெரால் அதிகளவில் உள்ளதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை இப்பழம் வெகுவாக குறைக்கும்.
 
அவகேடோ பழத்தில் லுடீன் என்ற ஆன்டிஆக்சிடன்ட், வயதாகிய பிறகும், பார்வை திறன் குறையாமல் தடுக்கிறது. மேலும், கண்களில் ஏற்படும் புரையை வளர விடாமல் தடுக்கும் ஆற்றல் அவகோடோவில் உள்ளது.
 
அவகேடோவில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், பீட்டா கரோட்டின் போன்ற பிற நன்மை பயக்கும் கொழுப்பில் கரையக்கூடிய ஆக்ஸிஜனேற்ற சத்துக்களை உடல் கிரகிக்க உதவுகிறது. எனவே, வயது மூப்பின் காரணமாக ஏற்படும் வளர்சிதை மாற்ற அபாயத்தைக் குறைக்க அவகேடோ உகந்தது.
 
எலும்புகளை வலுப்படுத்த தேவையான வைட்டமின் கே ஊட்டச்சத்து அவக்கோடாவில் கணிசமாக உள்ளது.
 
கர்ப்பிணிகள் இதைச் சாப்பிட்டு வந்தால், பிறக்க போகும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். ஆன்டிஆக்சிடன்ட் இதில் நிறைந்திருப்பதால் ஆண்களுக்கு வரும் ப்ரோஸ்டேட் புற்றுநோயையும், பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயையும் தடுக்கிறது.
 
மூப்படைதலை தடுத்து இளமையை தக்க வைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும். நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் செல்களை சேதமடையாமல் பாதுகாக்கும்.