1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Can eating an apple a day boost immunity...?

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா...?

Apple
உடலுக்கு தேவையான ஊட்டசத்துகளை ஆப்பிள் பழம் தன்னுளே கொண்டுள்ளது. ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.


ஆப்பிளை நன்கு மென்று சாப்பிட்டால் வாய் மற்றும் தொண்டைப் பகுதிகளில் உள்ள நுண்கிருமிகள் அழிக்கிறது. ஆப்பிளில் மாவுச்சத்து அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் படி ஒன்று அல்லது இரண்டு ஆப்பிள் துண்டுகளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

ஆப்பிளில் உள்ள ஃபைபர் ரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்திருக்க உதவும். ரத்த நாளங்களை தளர்த்துவதற்கு ஆப்பிள் பழத்தில் உள்ள பொட்டாஷியம் உதவுகிறது.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிள் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் தொடர்ந்து ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை விரைவில் விடுபடலாம்.

ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆப்பிள் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.

ஆப்பிள் பழத்தில் உள்ள ‘வைட்டமின் சி’ சத்து இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

வயதானவர் போன்ற தோற்றத்தை கொடுக்கும் முகச்சுருக்கங்களை போக்க ஆப்பிள் ஒரு சிறந்த நிவாரணியாகும். ஆப்பிளை மையாக அரைத்து முகத்தில் தேய்த்துவந்தால், விரைவில் முகச்சுருக்கங்கள் நீங்கி சருமம் புதுப்பொலிவு பெறும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
உடல் எடை குறைக்க உதவும் உணவுகள் என்ன...?