1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (18:22 IST)

வறண்ட தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும் கற்றாழை !!

Aloe vera
கற்றாழை முடிக்கு சிறந்த இயற்கை கண்டிஷனராக செயல்படுகிறது. இது வேர்களிலிருந்து முடியை வளர்த்து பலப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் அவற்றை மென்மையாகவும் பிரகாசமாகவும் வைத்திருக்கிறது.


கற்றாழை சாறை குடிப்பதால்  உடலுக்கு  ஊட்டச்சத்து கிடைக்கிறது. உடலுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதால்  முடியை  உள்ளிலிருந்து ஆரோக்கியமானதாக  உருவாக்குகிறது. அதனால் வலுவான ஆரோக்கியமான முடி கிடைக்கிறது.

கற்றாழை தலையை ஈரப்பதமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் தலையில் இருக்கும் சிறு புண்களை ஆற்றவும்  வறட்சியை குறைக்கவும் உதவுகிறது. இது தலைக்கு குளிர்ச்சியை தருகிறது. தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.

பொடுகு பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. தலையில் அதிகப்படியான எண்ணெய்யை அகற்றி தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது.

கற்றாழையை தலையில் தேய்த்து வர தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் முடி உதிர்வதையும் முடி உடைவதையும் தடுக்கும். மேலும் முடிக்கு நல்ல  பளபளப்பும் தரும்.

கற்றாழை சாற்றை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வெறும் வயிற்றில் எடுப்பது நல்லது அல்லது உணவிற்கு முன்பு எடுப்பது நல்லது. சிறிய அளவில் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வர உடலுக்கு பெரும் நன்மை பயக்கும்.