1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (15:11 IST)

பூண்டை எந்த முறையில் பயன்படுத்துவதால் நன்மைகள் உண்டாகும்!!

பூண்டு இருதய ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் முக்கிய இடம் பிடிக்கின்றது. பூண்டில் உள்ள அல்லிசின் ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.


பூண்டின் அதிகப்படியான நன்மையை அடைய பச்சையாக உட்கொள்ளலாம். அல்லது பூண்டு சூப், பூண்டு குழம்பு, பூண்டு சட்னி போன்ற உணவு பண்டங்களில் சேர்த்து சாப்பிடலாம்.

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பூண்டின் மருத்துவ பங்கு முதன்மையானது. ஜீரணமின்மை ஜலதோஷம், காதுவலி, வாயுத்தொல்லை, முகப்பரு, ஊளைச்சதை, இரத்த சுத்தமின்மை, புழுத்தொல்லை, இர்த்த அழுத்தம் சம்பந்தமான நோய்கள் மூலநோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் பூண்டு அவசியம்.

பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம், மாரடைப்பு வராது. இரத்த குழாயில் கொழுப்புப் படியாது. பூண்டை நெய்யில் வறுத்து உணவு உண்ணும் போது சாதத்தில் சேர்ஹ்த்து 40 நாட்கள் சாப்பிட வாய்வுத் தொல்லை மறையும்.

பூண்டை நசுக்கிய சாற்றுடன் கற்பூரத்தை கரைத்துப் பூச மூட்டுவலி குணமாகும். பூண்டுச் சாற்றில் சிறிது உப்பு கலந்து உடம்பில் எங்கேனும் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் பூசினால் சுளுக்கு மறையும்.

பூண்டை வெல்லம் கலந்து சாப்பிட்டால் உடல் வலி மறையும். பூண்டுடன் சிறிது ஓமத்தை நசுக்கிப்போட்டு கசாயம் வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க குழந்தைகளில் வாந்தி கொட்டாவி குறையும்.