திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (11:05 IST)

உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள பிஸ்தா !!

பிஸ்தாவில் ஆக்ஸிஜனேற்றங்கள் மற்ற நட்ஸ்களை விட அதிகமாக உள்ளன. தாமிரம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த பிஸ்தா நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தவும் உதவும்.


பிஸ்தாவில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது செரிமான மண்டலத்தை பாதுகாக்க உதவுகிறது. இந்த நார்ச்சத்து குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களால் செரிக்கப்பட்டு, அதை குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலமாக மாற்றுகிறது, இது மலச்சிக்கல், இதய பிரச்சினைகள் போன்ற பல்வேறு உடல்நலக் கேடுகளைத் தடுக்கிறது.

பிஸ்தாவில் வைட்டமின் பி6 உள்ளது. ஆகவே பிஸ்தாவை சாப்பிடுவதால், இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் தன்மை அதிகரிக்கின்றது. இதனால் மூளை நல்ல முறையில் செயல்படுகின்றது.

பிஸ்தாவில் லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மட்டுமல்லாமல், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கரோட்டினாய்டுகளும் உள்ளன.

பிஸ்தாவில் வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்திருப்பதால், பிஸ்தா சருமத்திற்கு மிகச் சிறந்தவை. பிஸ்தா சருமத்தை சுருக்கங்களிலிருந்து தடுக்கிறது. பிஸ்தா மிகவும் ஆரோக்கியமான நட்ஸ்களில் ஒன்றாகும். அவை இதய பாதுகாக்கும் நல்ல கொழுப்பு, உயர்தர புரதம், உணவு நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன.