வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (10:22 IST)

சித்த மருத்துவத்தின் பயன்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

சித்த வைத்தியத்தை பாட்டி வைத்தியம், கை வைத்தியம், தமிழ் மருத்துவம், நாட்டு மருத்துவம், மூலிகை மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், சித்த வைத்தியம் என்று பலர் பல பெயர்களில் அழைக்கப்படுவதுண்டு.


இயற்கையான பொருட்களைக் கொண்டு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றது. இயற்கை மூலிகைகள் சுலபமாகக் கிடைக்கக்கூடியவை என்பதால் மருந்துகளையும் குறுகிய காலத்தில் தயாரிக்கலாம்.

சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் அதிகமானவை பல ஆண்டுகள் கெடாது. சித்த மருத்துவமானது நீண்ட நாள்பட்ட நோய்களைக் கூட குணப்படுத்த கூடியது. அறுவை சிகிச்சைகள் மூலம் குணப்படுத்தக் கூடிய நோய்களைக் கூட சித்த மருத்துவ முறைகள் மூலம் அறுவை சிகிச்சை இன்றி குணப்படுத்த முடியும்.

உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடலுக்குத் தேவையான சத்துக்களை அதிகரிப்பதற்கு சித்த மருத்துவ மூலிகைகள் பயன்படுகின்றன.

சித்த மருத்துவம் பல விதமான நன்மைகளை நமக்கு தரக்கூடியவை. இருமல், ஒற்றைத்தலைவலி, வயிற்று வலி மற்றும் பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலி போன்ற பல நோய்களையும் குணப்படுத்த முடியும்.

இயற்கையாகவே தோன்றிய செடி, கொடிகளுக்கு மருத்துவ குணம் உண்டு. இதை வைத்து சித்த மருத்துவம் செய்யப்படுவதால் இது பக்கவிளைவுகள் அற்றது. சளி, இருமல், ஆஸ்துமா போன்ற நுரையீரல் பிரச்சனைகளை சித்த மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தலாம். தூதுவளையை பயன்படுத்தி சளி, இருமல் போன்ற பிரச்சினைகளை சரி செய்யலாம்.

சித்த மருத்துவத்தில் பயன்படுகின்ற மருந்து பொருட்கள் தழை, மரம், காய், கனி, பூ, வேர் முதலியவற்றாலானது. இதனால் அதிக செலவு செய்ய வேண்டியதில்லை.