வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

அன்னாசிப் பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள்...!

அன்னாசிப் பழத்தில் ப்ரோமெலைன் நொதிகள், அஸ்கார்பிக் அமிலம், விட்டமின் C, மாங்கனீசு, தயாமின் போன்ற எண்ணற்ற சத்துக்கள் அதிகமாக  நிறைந்துள்ளது.
பித்தத்தை தணிக்க தேவையான வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் அனைத்தையும் கொண்டு உள்ளது. தினம் சாப்பிட உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து நம்மை பராமரிக்கும். நோய் தொற்றுகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து, எலும்புகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்களை கொடுத்து  வலிமை பெற செய்கிறது.
 
ரத்த குறைபாடுகளால் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும் அன்னாசி பழத்தில் இருக்கும் சத்துக்களை கொண்டு பூர்த்தி செய்யலாம் மற்றும் ரத்த அளவையும் அதிகரித்து அதனால் எந்த பாதிப்புகளும் வராமல் தற்காத்து கொள்ளும். வைட்டமின் பி அதிகம் காண படுவதால் பெண்கள் அதிகம் எடுத்து கொள்ள உடல்  ஆரோக்கியம் பெற்று, பல வியாதிகளிடம் இருந்து தற்காத்து கொள்ளலாம்.
 
சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனை பாலுடன் சேர்த்து நன்கு ஊறிய பிறகு குடிக்க வேண்டும், இதனை தினம் குடித்து வந்தால் நோய்கள் நம்மை அணுகாது.
 
ஓர் அன்னாசி பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து, கலந்து, பின் அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும். பின் இந்த அன்னாசி பானத்தை, இரவு முழுவது வைத்து, மறுநாள் காலையில் அதை வெறும் வயிற்றில் 10 நாட்கள் தொடர்ந்து  சாப்பிட வேண்டும். இதனால் தளர்வான மார்பகங்கள் மற்றும் அதிகமான தொப்பைகள் வராமல் தடுக்கிறது.
 
அன்னாசிப் பழத்தை நாம் சாப்பிடுவதால், நமது உடலில் உள்ள சிக்கலான புரதங்களை உடைத்து, வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது.
 
அன்னாசிப் பழமானது, நமது உடம்பில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வீக்கங்கள் மற்றும் காயங்களை அழித்து, புற்று நோயை ஏற்படுத்தும் எதிர்வினைக் காரணிகளுடன் எதிர்த்து போராடுகிறது.
 
அன்னாசிப் பழத்தில் இருக்கும் சத்துக்கள், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள், பார்வைக் குறைபாடுகள், இருமல், சீரற்ற ரத்த ஓட்டம் போன்ற  பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.