கண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன...?
கண்ணுக்கு கீழ் ஏற்படும் கண் கருவளையத்தால் பெரும்பாலான பெண்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். அதிலும் திருமணமாகாத பெண்களுக்கு கண் கருவளையம் வந்து விட்டால் மனதளவில் சோர்வடைய செய்து விடுவர்.
கண்களுக்குக் கீழ் உள்ள தோலானது 0.5 மி.மீ தடிமனும் மற்ற இடத்தில உள்ள தோல் 2மி. மீ தடிமனும் கொண்டது. அதனால் மற்ற தோலை விட கண்களுக்கு கீழ் உள்ள தோல் மிக விரைவில் பாதிப்படைகிறது. மிக விரைவில் கருவளையத்தை மறைய வைக்கலாம்.
காரணங்கள்:
அதிக வேலைப்பளு காரணமான உடல் சோர்வு நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் உழைப்பதனால் நமது உடல் களைப்படைகிறது. உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களின் கருவளையம் நமக்கு உணர்த்துகிறது.
தூக்கம் நமது உடலுக்கும் கண்களுக்கும் சிறந்த ஓய்வு ஆகும். சரியான நேரத்தில் உறங்காமல் கணினி மற்றும் கைபேசியில் நமது நேரத்தைக் கழித்தால் கண்ணுக்கு கீழ் கருவளையம் கண்டிப்பாக ஏற்படும். ஒரு நாளுக்கு குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கண்களில் ஏற்படும் தொற்றினால் கண்களில் சில நேரம் அரிப்பு ஏற்படும். இதனால் கண்களை கசக்க நேரிடும். அதிகமாக கண்களை கசக்குவதால் மிகவும் மெல்லிய தோலான கண்களுக்குக் கீழ் உள்ள தோல் கருமையடைகிறது.
சிலருக்கு மரபியல் காரணங்களால் பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்கு ஏற்படலாம். சத்துக்குறைவினால் சிலருக்கு கண் கருவளையம் தோன்றும். சத்தான உணவு பழக்கவழக்க முறைக்கு மாறுவதே இதற்கு தீர்வு.
பெண்கள் அன்றாடம் முகத்தில் பல கிரீம்களை உபயோகிக்கின்றனர். இது சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. இதனால் மிகவும் மெல்லிய தோலான கண்களுக்கு அடியில் கருமையாக மாறுகிறது
அதிக நேரம் வெயிலில் அலைவதால் உடலும் மிகவும் மென்மையான தோலான கண்களுக்கு அடியில் உள்ள தோலும் பாதிப்படைகிறது. இதனால் கருவளையம் ஏற்படுகிறது. அதனால் வெயில் காலங்களில் கருவளையம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாரம் ஒருமுறையாவது கண்ணை குளிர்ச்சி படுத்தும் விதமாக கேரட் அல்லது வெள்ளரி பிஞ்சை மெல்லிதாய் நறுக்கி கண்ணின் மேல் வைத்தல் நலம் பயக்கும்.