1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

ஆரோக்கியம் தரும் திணை பாயசம் செய்ய...!

தேவையான பொருட்கள்: 
 
திணை - 1 கப்
வெல்லம் - 1 1/2 கப் (பொடித்தது)
பால் -  1 கப் (காய்ச்சியது)
ஏலக்காய் - 2 (பொடிக்கவும்)
முந்திரி - 8 (வறுக்கவும்)
தண்ணீர் - 1 1/2 கப் 
செய்முறை:
 
ஒரு வாணலியில் திணையைப் போட்டு 5 நிமிடம் வறுக்கவும். பிறகு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு எடுக்கவும். வெல்லத்தில் சிறிது  தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி வைத்துகொள்ள வேண்டும். இவற்றை வெந்த திணையில் ஊற்றி கொதிக்கவிடவும்.
 
வெல்லம் பச்சை வாசனை போன பின் பாலை சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அனைத்துவிட்டு ஏலப்பொடி, வறுத்த முந்திரி சேர்த்து கலக்கவும். திணை பாயசம் தயார்.