உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் திரிபலா பொடி !!
நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என மூன்று பொருள்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் பொடிதான் திரிபலா சூரணம் என்றழைக்கப்படுகிறது. திரிபலா பொடியாகவும் மற்றும் மாத்திரை வடிவிலாகவும் கிடைக்கின்றது.
இந்த பொடியை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். காலையில் சாப்பிட முடியாதவர்கள் இரவு படுக்கைக்கு முன்பு சாப்பிடலாம். முதுமையைத் தாமதப்படுத்தி, இளமையைத் தக்கவைக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதயநோய்கள் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.
உணவுப்பாதை, குடல் இயக்கம் சீராக செயல்பட இந்த சூரணம் உதவுகிறது. குடலுக்கு செல்லும் உணவுப்பாதையில் இருக்கும் நச்சுகளை நீக்கி மலச்சிக்கல் இல்லாமலும் காக்கிறது.
குடல் நச்சுக்களை வெளியேற்றும் போது குடலில் இருக்கும் நாடாப்புழுக்கள், ஒட்டுண்ணிகள், பூச்சி தொற்றுகள் போன்றவற்றை வெளியேற்ற உதவுகிறது. குடல் சுத்தமாக இருந்தாலே உடலில் பாதி பிரச்சனைகள் வராமல் இருக்கும்.
நீரிழிவு இருப்பவர்கள் அதை கட்டுக்குள் வைக்க திரிபலா சூரணத்தை எடுத்துகொள்ளலாம். இவை கணையைத்தின் வேலையை சிறப்பாக்கி இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கிறது. அதிக நீரிழிவு பிரச்சனையான ஹைப்பர் கிளைசீமியா என்று சொல்லகூடிய சர்க்கரை நோயாளிகளுக்கு இவை அருமருந்தாக இருக்கும்.
ரத்தத்தில் இருக்கும் நச்சுகளை நீக்கி , ரத்த ஓட்டத்தை சீராக்க இவை உதவுகிறது. அதோடு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிகையை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் ரத்த சோகை வராமல் தடுக்கப்படுகிறது. ரத்தத்தை சுத்தம் செய்வதால் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. சருமம் இயற்கையாகவே பளபளப்பை அடைய இந்த சூரணம் உதவுகிறது.
Edited by Sasikala