1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 18 அக்டோபர் 2022 (11:56 IST)

நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவுகிறதா சூரியகாந்தி விதைகள்...?

Sunflower - Seeds
சூரியகாந்தி விதைகள் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் நிறைந்த விதைகளில் ஒன்று. இவை உங்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்புகள், பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. பொதுவாக சூரியகாந்தியில் இரண்டு வகைகள் உள்ளன. அதில் ஒன்று எண்ணைக்காகவும் மற்றொன்று விதைகளுக்காகவும் பயிரிடப்படுகின்றன.


முக்கியமாக சூரியகாந்தி விதைகள் நோயைத் தடுக்கவும் போராடவும் உதவுகின்றன. ஏராளமான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல சிறந்த மூலமாகும். சூரியகாந்தி விதைகளில் அடங்கியுள்ள செலினியம் வீக்கத்தையும், நோய்த்தொற்றையும் எதிர்த்துப் போராடுவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

விதைகளில் வைட்டமின் ஈ, துத்தநாகம், செலினியம் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் ஏற்படக்கூடிய செல்களின் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தில் இருந்து காக்கிறது. இந்த விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டும் இல்லாமல் நாள்பட்ட நோய்களும் வராமல் தடுக்கிறது.

சூரியகாந்தி விதைகளில் இரத்தக்குழாய் சுருக்கங்களை உண்டாக்கக்கூடிய நொதிகளை அழிக்கக்கூடிய கலவை உள்ளது. இது இரத்த நாளங்களை தளர்த்துவதால் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது. விதைகளில் உள்ள மெக்னீசியம் தமனிகளின் சுவருக்கு எதிரான இரத்த அழுத்தத்தை தடுக்கிறது.

தினசரி ஒரு கைப்பிடி அளவு சூரியகாந்தி விதைகளை சாப்பிட்டு வந்தால் ஆறு மாதங்களில் 10 சதவிகிதம் உணவிற்கு முன் உள்ள இரத்த சர்க்கரை அளவு குறையும். பல ஆய்வுகளில் இந்த விதைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Edited by Sasikala