1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 18 அக்டோபர் 2022 (10:36 IST)

கருப்பு கவுனி அரசியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளதா...?

Karuppu Kavuni
அரிசியில் பல வகைகள் உள்ளன. அதில் கருப்பு கவுனி அரிசி மிகவும் ஆரோக்கியமான அரிசியாக கருதப்படுகிறது. ஆரோக்கியமான அரிசிகளின் வரிசையில் கருப்பு கவுனி அரிசி முதல் இடத்தைப் பிடிக்கிறது.


கருப்பு கவுனி அரிசியில் இயற்கையாகவே அதிக அளவில் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்ட ஒரு உணவு பொருளாகும். இந்த கருப்பு அரிசியில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களைப் போக்க உதவுகிறது.

கருப்பு கவுனி அரிசியை தினமும் சாப்பிட்டால் தமனியில் கொழுப்பு படிதலை குறைத்து மாரடைப்பு மற்றும் பக்க வாதம் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைகிறது. வெள்ளை அரிசிக்கு பதிலாக மற்ற வகை அரிசிகளை உணவில் சேர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே உள்ளது.

கருப்பு கவுனி அரிசியில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் உள்ளன. இதனால் நீரிழிவு ,புற்றுநோய், இதய நோய் மற்றும் இன்னும் பல நோய்கள் வராமல் தடுப்பதற்கு உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கருப்பு கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து வளமான அளவில் இருப்பதால், உணவு சாப்பிட்ட பின் இரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல், சீராக வைப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது.

நீரிழிவு நோய் இருப்பவர்கள் வெள்ளை அரிசியை சாப்பிடுவதற்கு மாற்றாக, கருப்பு கவுனி அரிசியை தினமும் உணவில் எடுத்துக் கொண்டால், நீரிழிவை நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. குண்டான உடலை குறைப்பதற்கு இந்த கருப்பு கவுணி அரிசி ஒரு சிறந்த உணவாக இருக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கருப்பு கவுணி அரிசியில் செய்த உணவுகளை உண்பதன் மூலம் மிக எளிதாக உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

Edited by Sasikala