1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. To make easy tasty Arisi Murukku...!!

சுலபமான சுவையான அரிசி முறுக்கு செய்ய...!!

முறுக்கு
தேவையான பொருட்கள்:
 
புழுங்கல் அரிசி - 2 கிலோ
கடலை மாவு - 500 கிராம்
பொட்டுக்கடலை - 500 கிராம் (அரைத்தது)
எள்ளு - தேவையான அளவு
ஓமம் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - தேவையான அளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - தேவையான அளவு

செய்முறை:
 
அரிசியை ஊறவைத்து, அரைத்துக்கொள்ள வேண்டும், அதனுடன் கடலை மாவு, அரைத்து வைத்த பொட்டுக்கடலை சேர்த்து கலக்க வேண்டும். மிளகாய், சீரகம், உப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அரிசி மாவுடன் அவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
 
அதனுடன் தேவையான அளவு எள்ளு, ஓமம் (கைகளில் அழுத்தி தேய்த்தது)  சேர்த்து கலக்க வேண்டும். வெண்ணெய் சேர்த்து சிறிது நேரம் கலக்கினால்  போதுமானது.
 
விறகு அடுப்பில் எண்ணெய் காய வைத்து முறுக்கு பிழியும் (முறுக்கு பிடியில்) சுற்றி எடுத்துக்கொண்டு பொறிக்கலாம். பக்குவாமாக சராசரி சூட்டில் மொறுமொறுப்பான, சுவையான அரிசி முறுக்கு தயார் செய்யலாம்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை இயற்கை முறையில் எளிமையாக போக்க...!!