1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (18:01 IST)

திருநீற்று பச்சிலை பயன்கள் !!

Thiruneetru Pachilai
திருநீற்று பச்சிலையில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு போன்ற தாது உப்புகள் அடங்கி உள்ளது.


காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு இதன் இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.

திருநீற்று பச்சிலையைக் கசக்கி அதன் சாறை பருவின் மீது தடவி வந்தால் பரு மறையும் புரையோடி சீழ் வைத்த பருப்பு விஷப் பருக்கள்கூட மறைந்துவிடும்.

நறுமணம் வீசும் இந்தச் செடியின் இலைகளை அரைத்துப் பூசினால் கட்டிகள் கரையும். இலையை மட்டும் முகர்ந்து பார்த்தால் தலை வலி, இதய நடுக்கம், தூக்கமின்மை சரியாகும்.

இலைச்சாற்றுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்பு வலி, இருமல், வயிற்று வாய்வு பிரச்சனைகள் குணமாகும்.

வயிற்று புண்கள் உள்ளவர்கள் வேரினை இடித்து, கஷாயம் செய்து காலை மாலை இரண்டு வேளை எடுத்து கொண்டால், வயிற்று புண்களை குணமடைய செய்யும். அஜிரண கோளாறுகளையும் குணமடைய செய்கிறது.