1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 16 ஜூலை 2022 (12:17 IST)

இத்தனை பயன்கள் நிறைந்துள்ளதா எலுமிச்சை சாற்றில் !!

Lemon
எலுமிச்சை உடலின் உள் பகுதியில் உள்ள நோய்களை குணப்படுத்துவதோடு உடலின் மேல் பகுதியையும் பாதுகாப்பாக வைப்பதில் எலுமிச்சைக்கு நிகர் வேறெதுவும் கிடையாது.


எலுமிச்சை பழத்தில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்கவும், எலும்பு தேய்மானம் அடையாமல் இருக்கவும் பயன்படுகிறது. எனவே அடிக்கடி எலுமிச்சை சாறு கலந்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எலுமிச்சை பழ சாறினை நேரடியாக அருந்தக்கூடாது. எலுமிச்சை அமிலத்தன்மை நிறைந்த பழம் என்பதால் எப்போது அருந்தினாலும் சிறிதளவு தண்ணீருடன் கலந்து தான் குடிக்க வேண்டும்.
எலுமிச்சை மருத்துவ பயன்கள்

எலுமிச்சை பழத்தில் நிறைந்துள்ள சிட்ரிக் அமிலம் புற்றுநோய் வராமல் தடுத்து புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கிறது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு,  சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் உடல் இளைத்து உடல் பொலிவு உண்டாகும்.

வாய்துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க தினமும் எலுமிச்சை சாறினை வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்துர்நாற்றம் ஏற்படாது. அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டு அஜீரண கோளறு ஏற்பட்டால் சிறிதளவு எலுமிச்சை சாறு குடித்தால் விரைவில் ஜீரணம் ஆகும்.

எலுமிச்சை உடலுக்கு நன்மை அளிப்பதோடு சருமத்திற்கு நல்ல பொலிவை தருகிறது.  எலுமிச்சை பழச்சாற்றினை முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகச்சுருக்கம், கரு வளையம் அனைத்தும் மறைந்து விடும்.