வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 16 ஜூலை 2022 (10:02 IST)

அன்றாட உணவில் முள்ளங்கி கீரையை சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் பயன்கள் !!

முள்ளங்கிக் கிழங்கின் மேல் பக்கம் தழைத்து வளர்ந்திருக்கும் இலைகளைதான் முள்ளங்கிக் கீரை என்கிறோம்.


முள்ளங்கிக் கீரையின் சாற்றை 5 அல்லது 6 டீஸ்பூன் அளவு எடுத்து, 3 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும். சிறுநீர்ப்பை வீக்கம் இருந்தாலும் குணமாகும். சிறுநீர் கல்லடைப்பு, கரப்பான் என்ற தோல் வியாதிகளையும் குணமாக்கும்.

முள்ளங்கிக் கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும். வைட்டமின் பற்றாக்குறைகளும் நீங்கும்.

 முள்ளங்கி கீரையானது இரைப்பைக் கோளாறு, சிறுநீரக நோய்கள், மூலக்கடுப்பு, மஞ்சள் காமாலை போன்றவைகளை குணப்படுத்துகிறது.

முள்ளங்கி கீரைய நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும். மலச்சிக்கலைக் குணப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கி கீரைக்கு உண்டு.

கல்லீரலில் உண்டாகும் பலவிதமான கோளாறுகளை முள்ளங்கி கீரை குணப்படுத்தும். முள்ளங்கி கீரையானது இருதயத்திற்கு பலம் சேர்க்கும். மேலும் இதயம் பாதிக்கப்பட்டவர்கள், இதயப் படபடப்பு, இதய பலவீனம் உடையவர்கள் வாரம் ஒரு முறையாவது இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், முள்ளங்கிக் கீரையின் சாற்றை 1 ஸ்பூன் எடுத்து 3 வேளைகளும் சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும்.