1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (17:06 IST)

உடல் நலத்தை மேம்படுத்தும் மூலிகைகளில் சிறந்த ஏலக்காய் !!

நறுஞ்சுவையும் நறுமணமும் உள்ள மருந்துப்பொருள்.  கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. சிறுநீரைப் பெருக்கும். தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, வறட்சி, கபம் முதலியவற்றைக் கட்டுப் படுத்தும்.


நெல்லிக்காய்ச் சாறில் ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளைச் சேர்த்துத் தினம் மூன்று வேளை அருந்தி வந்தால் மேகவெட்டை நோய்க்கு இது அருமருந்தாகும். இத்துடன் சிறுநீர்ப்பை சுழற்சியும் சிறுநீர்க் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும்.

ஏலரிசியுடன் சீரகம், சுக்கு, கிராம்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். 2 கிராம் அளவு பொடியை தேனில் கலந்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்தால் வயிற்றுவலி குணமாகும்.

விரைப்புத் தன்மை கோளாறால் அவதிப்படும் ஆண்களுக்கு ஏலக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ஏலக்காயில் உள்ள சினியோல் ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.

நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம்.

வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சினை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.