1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Some medical tips to help cure ulcers caused by diabetes !!

சர்க்கரை நோயினால் ஏற்படும் புண்ணை சரிசெய்ய சில மருத்துவ குறிப்புகள் !!

சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் உள்ள சிலருக்கு புண் ஏற்பட்டால் அது விரைவில் ஆறாது. ஒரு சிலருக்கு புண் மேலும் பெரிதாகி பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.


மா இலை மற்றும் அத்தி இலை ஆகிய இரண்டையும் எடுத்து அரைத்து கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு மண் பாத்திரம் வைத்து அதில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் இந்த அரைத்த இலைகளை போட்டு அது பாதியாக வரும் வரை காய்ச்ச வேண்டும்.

பின்பு இதை ஒரு வெள்ளை துணியில் ஊற்றி வடிகட்டி அந்த சாறை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். இந்த சாற்றை தினமும் காலை உணவுக்கு முன்பு 50 மில்லி குடிக்க வேண்டும். அதேப்போல் இரவு உணவுக்கு பிறகு 50 மில்லி குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வர உடலில் ஏற்பட்ட புண் விரைவில் சரியாகும்.

அத்தி இலை, வேப்பிலை, மஞ்சள் தூள் ஆகிய மூன்றையும் எண்ணெய்யில் போட்டு கலந்து புண் ஏற்பட்ட இடத்தில் இரவில் தூங்கும் முன்பு தடவி வந்தால் தீராத புண்களும் சரியாகிவிடும். அதேப்போல் பகலில் உணவிற்கு முன்பு பப்பாளி பழம் சாப்பிடலாம். உடல் ஆரோக்கியத்திற்கும், புண் சரியாவதற்கும் மிகவும் நல்லது.

குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதும், தொடக்கத்தில் தெரியாது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி தாகம் ஏற்படும். அதிகமாக பசி ஏற்படுதல், உடல் சோர்வு, எடை மிக வேகமாகக் குறைதல், சிறுநீர் வெளியாகும் இடத்தில் அரிப்பு ஆகியவை சர்க்கரை நோயின் அறிகுறிகளாக கருதலாம்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
உடல் நலத்தை மேம்படுத்தும் மூலிகைகளில் சிறந்த ஏலக்காய் !!