புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : புதன், 12 ஜனவரி 2022 (16:19 IST)

இத்தனை அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் மஞ்சள் !!

மஞ்சள் இயற்கை சன்ஸ்கிரீனாக விளங்குவதால், இந்திய பெண்கள் தோலுக்கு ஊட்டமளிக்கும் பொருளாக பயன்படுத்துகின்றனர். இது முகம் மற்றும் உடலின் தேவையற்ற பகுதிகளில் முடிகள் வளர்வதை தடுக்கிறது.


மஞ்சள் தூளை நேரடியாக சருமத்தில் தேய்த்து கழுவினால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள் கரும்புள்ளிகளையும், சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்திற்கு பாதுகாப்பும் கொடுக்கும். சருமத்தில் உள்ள காயங்களை குணமாக்க மஞ்சள் தூளுடன் தேன் சேர்த்து கலந்து, தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

பாதங்களில் ஏற்படும் வெடிப்புக்களை போக்குவதற்கு, தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூளை கலந்து, வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தடவி வந்தால், விரைவில் வெடிப்புக்கள் நீங்கி, பாதங்கள் மென்மையாக மாறும்.

உடலின் ஏதாவது பாகத்தில் வீக்கம் ஏற்பட்டால் மஞ்சள் தூளையும் வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து வீக்கத்தில் தடவினால் குணமாகி விடும். அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகள் மறைய மஞ்சள் தூளுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவினால் மறைந்துவிடும்.

கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெங்காயச் சாற்றில் குழைத்து, கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் பழுத்து உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து மிதமான சூட்டில், அடிபட்ட இடத்தில் தடவி வந்தால், வலியும், வீக்கமும் குறையும்.

முகத்தில் உள்ள தோல் சொரசொரப்புடன் இருந்தால் மஞ்சளோடு துளசியை அரைத்துப் பூசி வந்தால் தோல் மென்மையாக மாறும். நம் வீட்டு வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சளை கரைத்துத் தெளிப்பதற்கும், மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருப்பதே காரணம். இது வீட்டுக்குள் கெட்ட கிருமிகள் வராமல் தடுக்கும்.

மஞ்சள் பசியைத் தூண்டுவதோடு செரிமானத்திற்கு உதவும் குணம் கொண்டது. ரத்தத்தை சுத்தப்படுத்தி, குடற்பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல் கொண்டது. நீரழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக் குறைக்கும். மஞ்சளை சுட்டு பற்பொடி போல செய்து பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான பல நோய்கள் குணமாகும்.