திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (15:12 IST)

எலுமிச்சை + உப்பு: மருத்துவ குணங்கள் என்னென்ன??

எலுமிச்சையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. மனிதர்களுக்கு ஏற்படும் எல்லாவித நோய்களையும் குணமாக்கும் நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது.

 
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க செய்யும். உடல் சோர்வாகவும் களைப்பாகவும் இருக்கும் போது எலுமிச்சை சாறு குடித்தால் உடனடியாக புத்துணர்ச்சி தரும். ஆயுர்வேத மருத்துவத்தில் எலுமிச்சை அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
 
எலுமிச்சை சாறில் சிறிது உப்பு கலந்து குடிப்பதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். அஜீரணக் கோளாறுகள் நீங்கும். எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடித்தால் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும்.
 
எலுமிச்சை தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடலில் வலி, எரிச்சல் மற்றும் வீக்கம் போன்றவற்றை குறைக்கும். மேலும் வைட்டமின் சி குறைபாட்டை சரிசெய்யும்.
 
இரவில் சரியாக தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் தூங்கும் முன் எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடித்து வந்தால் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு நல்ல தூக்கத்தை தரும்.
 
எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலனை தரும்.