1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (09:30 IST)

கல் உப்பை பயன்படுத்தி சில பயன்தரும் வைத்திய குறிப்புகள் !!

காலை வேளையில் இரப்பையில் பித்தம் நிறையத் தேங்கி நிற்கும். இதன் காரணமாக காலை, வேளையில் கிறுகிறுப்பு வாந்தி ஏற்படும்.


இந்தப் பித்தத்தை வெளியேற்ற வேண்டுமானால், ஒரு கைப்பிடியளவு உப்பை எடுத்து, அதே அளவு முருங்கை கீரையுடன் அம்மியில் வைத்துத் தட்டிக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, அந்தச் சாற்றைக் காலையில் எழுந்தவுடன் குடித்து விட்டால் இரண்டு மூன்று தடவை வாந்தி வரும். 
 
இந்த வாந்தி பச்சை நிறமாக இருக்கும். இந்த வாந்தி நின்றபின் பல்துலக்கிச் சாப்பிடலாம். இந்த முறையில் வாரத்திற்கு ஒருநாள் சாப்பிட்டு வாந்தி எடுத்தால் உடலிலுள்ள பித்தம் எல்லாம் வெளியேறி விடும். பித்த சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.

உப்பைச் சட்டியில் போட்டு நன்றாக வறுத்து, அதை ஒரு சிறிய துண்டுத் துணியில் கொட்டிச் சிறிய மூட்டை போலச் சேர்த்துக் கட்டி, நல்ல சூடாக இருக்கும் பொழுது வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இந்தவிதமாக ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ஒத்தடம் கொடுத்தால் வேதனைக் குறைந்துவிடும்.
 
காயம்பட்ட புண்ணின் மேலுள்ள இரத்தத்தைச் சுத்தம் செய்துவிட்டு, தேவையான அளவு மிளகாய்த் தூளை எடுத்து அதே அளவு உப்புத் தூளையும் ஒன்றாகச் சேர்த்து கொஞ்சம் வேப்ப எண்ணெய்விட்டுக் கிளறி ஒரு கரண்டியில் போட்டு நன்றாகச் சூடேறச் செய்து, இறக்கி தாளக்கூடிய சூட்டுடன் இதைக் காயத்தின் மேல் வைத்துக் கட்டிவிட்டால் காயம் பட்ட புண் ஆறும்.
 
வீக்கம், இரத்தக்கட்டு குணமாக: இடத்திற்குத் தேவையான அளவு உப்பும், அதே அளவு புளிச்சதையையும் சேர்த்துக் குழம்புக்குக் கரைப்பது போல கெட்டியாகக் கரைத்து, ஒரு இரும்புக் கரண்டியில் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க விடவேண்டும்.
 
கொதித்தபின் இறக்கிவைத்து அது ஆறிவரும் சமயம் தாளக்கூடிய சூட்டுடன் எடுத்து, வீக்கம், இரத்தக்கட்டு உள்ள இடத்தில் கனமாகப் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் வாடும். இரத்தக்கட்டு குணமாகும்.