1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (14:15 IST)

சீயக்காயை தொடர்ந்து பயன்படுத்துவதால் கிடைக்கும் பயன்கள் !!

சீயக்காய் பயன்படுத்துவதால் தலைப்பகுதியில் உள்ள சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும். முடியின் அமில, கார சமநிலை சீராகும். பொடுகு நீங்கும். சொறி, சிரங்கு, கொப்புளங்கள் போன்ற சரும பிரச்சினைகள் குணமாகும்.

முடி உதிர்தல் பிரச்சினை இருப்பவர்கள் வாரம் இரண்டு முறை சீயக்காய்த்தூள் பயன்படுத்தி, தலைக்குக் குளிக்கலாம். 
 
தலையில் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்த பின்பு, சீயக்காயைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் கூந்தல் உதிர்வது, இளநரை, அரிப்பு போன்ற பிரச்சினைகள் தீரும்.
 
செம்பருத்தி, வெந்தயம், பூலாங்கிழங்கு, எலுமிச்சை பழத் தோல், பச்சை பயறு, காய்ந்த நெல்லி, ஆவாரம் பூ ஆகியவற்றை சீயக்காயுடன் கலந்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, இந்தப் பொடியை உபயோகப்படுத்தி குளித்தால் கூந்தல் பொலிவுடன் இருக்கும்; வளர்ச்சி அதிகரிக்கும்.
 
சீயக்காய், எண்ணெய்ப் பசையை நீக்கி கூந்தலை மிருதுவாக்கும் தன்மை கொண்டது. இயற்கை கண்டிஷனராக செயல்படும்.